இந்தியா
இந்தியா-பாக். இரு தேசிய கீதத்தையும் இணைத்து புதிய பாடல்
இந்தியா-பாக். இரு தேசிய கீதத்தையும் இணைத்து புதிய பாடல்
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுடைய சுதந்திர தினங்களைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் இரு நாடுகளின் தேசிய கீதங்களையும் இணைத்து புதிய பாடல் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.
இரு நாடுகளைச் சேர்ந்த பாடகர்களும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டிருக்கும் இந்தப் பாடலுக்கு ‘அமைதி கீதம்’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. ‘வாய்ஸ் ஆப் ராம்’ என்ற ஃபேஸ்புக் குழுமத்தை இயக்கிவரும் ராம் சுப்பிரமணியன் என்பவர் இந்தப் பாடலை உருவாக்கியுள்ளார்.