உயரத்தில் யார் கொடி?... எல்லையில் இந்தியா - பாக். இடையே போட்டா போட்டி
வாகா எல்லையில் தேசியக்கொடியை மிக உயரத்தில் பறக்கவிடுவதில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி பாகிஸ்தான், சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இந்நிலையில், சுதந்திர தின விழாவையொட்டி, அட்டாரி - வாகா எல்லையில் மிக உயரத்தில் தேசியக்கொடியை பறக்க விடுவதில், இருநாடுகளுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி அட்டாரியில் 360 அடி உயர கம்பத்தில் இந்திய தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது. ஆனால், சில நாட்களில் பலத்த காற்று காரணமாக கொடி சேதமடைந்தது. இந்நிலையில், 400 அடி உயர கம்பத்தில் பாகிஸ்தான் தனது தேசியக்கொடியை பறக்கவிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக 120 அடி அகலம் கொண்ட தேசியக்கொடியை பாகிஸ்தான் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.