india pakistan agree to full ceasefire
usa, india, pakistanx page

அமெரிக்கா தலையீடு | முடிவுக்கு வந்த போர்.. உறுதிசெய்த இந்தியா!

அமெரிக்காவின் நீண்ட இரவு மத்தியஸ்தம் பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் முழுமையாகவும், உடனடியாகவும் சண்டையை நிறுத்த ஒப்புதல் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ர்மப் தெரிவித்துள்ளார்.
Published on

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவமும் விமானப் படையும் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்களைத் துல்லியமாக அழித்தது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லைகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைத் தாக்கிப் போரைத் தொடங்கியது. இதை இந்தியா வழிமறித்து அழித்தது. இதனால் இருதரப்பிலும் போர் தீவிரமாய் நடைபெற்று வந்தது.

india pakistan agree to full ceasefire
விக்ரம் மிஸ்ரிpt web

இதற்கிடையே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சமரசம் ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆகியோரை தொடர்பு கொண்டு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ பேசினார்.

அமெரிக்காவின் நீண்ட இரவு மத்தியஸ்தம் பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் முழுமையாகவும், உடனடியாகவும் சண்டையை நிறுத்த ஒப்புதல் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ர்மப் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர், “அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நீண்ட இரவு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

india pakistan agree to full ceasefire
OPERATION SINDOOR | பலியான 5 பயங்கரவாதிகள்.. வெளியான விவரம்!

இதையடுத்து, இந்தியா போர் நிறுத்தத்தை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “இந்தியா - பாகிஸ்தான் ராணுவத் தளபதிகள் மாலை 3.30 மணிக்கு தொலைபேசியில் பேசினர். இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணியில் இருந்து போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com