ஒரே நாடு ஒரே ஊதிய தினம்: மத்திய அரசு திட்டம்

ஒரே நாடு ஒரே ஊதிய தினம்: மத்திய அரசு திட்டம்

ஒரே நாடு ஒரே ஊதிய தினம்: மத்திய அரசு திட்டம்
Published on

ஒரே நாடு ஒரே ஊதிய தினத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

முறைப்படுத்தப்பட்ட துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரே நாடு ஒரே ஊதிய தினம் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார். 

பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க ஒரே மாதிரியான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழிலாளர் நல சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ள மத்திய அமைச்சர், பணியில் பாதுகாப்பு, உடல்நலம், ஊதியம் ஆகியவற்றில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட, கடுமையான சட்டதிட்டங்களை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com