இந்தியா
"கொரோனா பாதிப்பில் பிற நாடுகளைவிட இந்தியா நல்ல நிலையில் உள்ளது" - பிரதமர் மோடி
"கொரோனா பாதிப்பில் பிற நாடுகளைவிட இந்தியா நல்ல நிலையில் உள்ளது" - பிரதமர் மோடி
கொரோனா பாதிப்பில், பிற நாடுகளைவிட இந்தியா நல்ல நிலையில் இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கேரளாவின் மலங்கரா மார் தோமா சிரியன் தேவாலயத்தில் நடைபெற்ற பாதிரியார் ஜோசப் மார் தோமாவின் 90வது பிறந்தநாள் நிகழ்ச்சியில், காணொலி வாயிலாகப் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பாஜக அரசின் திட்டங்களால் சுமார் 8 கோடி குடும்பங்கள் புகையில்லா சமையலறைகளைப் பெற்றுள்ளன என்றார். மேலும், வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இதுவரை ஒன்றரை கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் தீவிரமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமுடக்கம் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் பல நாடுகளைக் காட்டிலும் இந்தியா சிறப்பான இடத்திலேயே இருக்கிறது என்றார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுக் குணமடைவோரின் விகிதமும் உயர்ந்து வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.