இந்தியாவில் போர் இல்லை ! பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியாவில் போர் இல்லை ! பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியாவில் போர் இல்லை ! பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்
Published on

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஓரு ஆய்வு மேற்கொண்டது. ஐநாவில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் 550 வல்லுநர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொருளாதார சுதந்திரம், பாதுகாப்பு, பாரம்பரிய நடைமுறைகள், பாலியல் குற்றங்கள் மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் பல்வேறு நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்த ஆய்வில் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் பெண்கள் நடத்தப்படும் விதம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. போர் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளது. இந்தப்பட்டியலில் மேற்கத்திய நாடான அமெரிக்கா 10வது இடத்தில் உள்ளது. 

சிரியாவில் முகாம்களில் நடக்கும் கொடுமைகள் குறித்தும் அங்கு நிவாரணப் பொருட்கள் பெற பெண்கள் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்படுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அதிர்ச்சி தகவல் வெளியானது.  

இந்தியாவில் மருத்துவ மாணவி நிர்பயா, டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டார். சாலையோரத்தில் மீட்கப்பட்ட மாணவி சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்திற்கு பிறகும் விழிப்புணர்வோ, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள், கட்டாய திருமணம், பெண் சிசுக்கொலை, பாலியல் வன்முறை, பாலியல் அடிமைத்தனம், பெண் கடத்தல் உள்ளிட்ட காரணங்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடத்தை அளித்துள்ளனர்

இந்திய அரசின் புள்ளி விவரங்கள் 2007 முதல் 2016க்கு இடைப்பட்ட காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 83 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கிறது. மேலும் இந்தியாவில், ஒரு மணி நேரத்திற்கு 4 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அரங்கேறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com