இந்த 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் - மத்திய அரசு

இந்த 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் - மத்திய அரசு
இந்த 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் - மத்திய அரசு

சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சீனாவில் புதிதாக வேகமாகப் பரவிவரும் பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து உலக நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மத்தியில், இந்தியாவில் ஜனவரி மாத மத்தியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு ஆர்.டி-பி.சி.ஆர்.  பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்தப் பரிசோதனை, இந்தியாவுக்கு புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், இதன் சான்றிதழை ஏர் சுவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இந்தியா வரும் வெளிநாட்டுப் பணிகளால் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. அடுத்த 40 நாட்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

தவற விடாதீர்: “நானா அந்த கொரோனாவானு ஒரு கை பாத்துற்றேன்” - சீன தம்பதியின் Pro Level ஐடியா!



 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com