சீனாவுக்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது: சுஷ்மா

சீனாவுக்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது: சுஷ்மா

சீனாவுக்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது: சுஷ்மா
Published on

சீனாவுக்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். 

இந்தியா, சீனா மற்றும் பூடான் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியாக இருக்கும் தோக்லாம் பகுதியில் சீனா அச்சுறுத்தலை ஏற்படுத்த சீனா முயற்சி செய்துவரும் நிலையில், இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சுஷ்மா சுவராஜ் இவ்வாறு பதிலளித்தார். மேலும், அவர் பேசுகையில், மூன்று நாடுகளின் எல்லைப்பகுதியை ஒட்டி பகுதியை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. அந்த பகுதியில் சாலைகளை செப்பனிடுவது உள்ளிட்ட வேலைகளில் சீனா ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார். மூன்று நாடுகளின் எல்லைப்பகுதியை சீனா ஒருதலைபட்சமாக மாற்றும் நிலையில், அது நமது தேசப்பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் சுஷ்மா தெரிவித்தார். சீனாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாகக் கூறிய அவர், சீனாவுடனான எல்லை தொடர்பான நிலைப்பாட்டில் மற்ற நாடுகளின் ஆதரவு நமக்கு இருப்பதாகவும் கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com