அருணாச்சல எல்லையில் இந்திய - சீன வீரர்கள் மோதல்; 3 நாட்களுக்கு பிறகு வெளியான தகவல்

அருணாச்சல எல்லையில் இந்திய - சீன வீரர்கள் மோதல்; 3 நாட்களுக்கு பிறகு வெளியான தகவல்
அருணாச்சல எல்லையில் இந்திய - சீன வீரர்கள் மோதல்; 3 நாட்களுக்கு பிறகு வெளியான தகவல்

அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள எல்லைப் பகுதியில் இந்தியா - சீன ராணுவ வீரர்கள் இடையே மோதம் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற இந்த மோதல் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

நடந்தது என்ன?

கடந்த டிசம்பர் 9ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில், இந்தியா மற்றும் சீன ராணுவங்கள் எல்ஏசி எனப்படும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் மோதிக்கொண்டன. அந்தமோதலில் இரு தரப்பிலும் பல வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. பிறகு இரு தரப்பினரும் உடனடியாக அந்தப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். குவாஹத்தியில் உள்ள மருத்துவமனைக்கு இந்திய வீரர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.

கல்வான் தாக்குதலுக்கு பிறகு..

2020 ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் தான் இந்திய-சீனா மோதல்களில் மிக மோசமானது. அந்த மோதலில் நாட்டிற்காக 20 இந்திய வீரர்கள் இறந்தனர் மற்றும் 40 க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல்களை ஏற்படுத்தியது. பின்னர் இரண்டு நாட்டு ராணுவத் தளபதிகளுக்கு இடையேயான பல சந்திப்புகளுக்குப் பிறகு, லடாக்கில் உள்ள கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளில் இருந்து இந்திய மற்றும் சீன ரானுவங்கள் பின்வாங்கின

நடந்தது என்ன?

டிசம்பர் 9 ஆம் தேதி சீன ராணுவ வீரர்கள் தவாங் செக்டாரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்தப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களும் பணியில் இருந்தனர். அப்போது நேருக்கு நேர் சந்தித்த போது லேசான வாய் தகராறு மோதலில் முடிந்தது. கிழக்கு தவாங்கின் யங்ஸி பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. பின்னர், அங்கிருந்து இருதரப்பினரும் வெளியேறினர். இதனையடுத்து இந்திய ராணுவத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின் அங்கு அமைதியான சூழல் உறுதி செய்யப்பட்டது. 

இருப்பினும், எல்லையில் என்ன நடைபெற்றது என்பது குறித்து இருநாட்டு ராணுவம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக இதுவரை எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. 

காரணம் என்ன?

எல்லைப்பகுதியில் இருக்கும் சில இடங்களை இருநாட்டு வீரர்களும் தங்களுக்கு சொந்தமானது என்ற எண்ணத்தில் உள்ளனர். அதனாலே இருதரப்பினருக்கும் மோதல் போக்கு நிலவியது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com