\
இந்தியாவுக்கு முதலிடமில்லை 3ம் இடம்

இந்தியாவுக்கு முதலிடமில்லை 3ம் இடம்

இந்தியாவுக்கு முதலிடமில்லை 3ம் இடம்
Published on

அரசின் மீது மக்கள் அதிகம் நம்பிக்கை வைத்துள்ள நாடுகள் பட்டியலில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் இல்லை, மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

ஒவ்வொரு நாட்டின் மக்கள், அவர்கள் அரசின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று ஓஇசிடி (பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு) என்ற அமைப்பு உலக அளவில் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இந்த கணக்கெடுப்பின் முடிவை ஓஇசிடி அறிவித்தது. அந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் 73 சதவீத மக்கள் நம்பிக்கையுடன் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. 80 சதவீத மக்கள் நம்பிக்கையுடன் இந்தோனேசியாவும், ஸ்விட்சர்லாந்தும் முதலாம் இடத்தில் இருக்கின்றன.

2007 முதல் 2016 ஆம் ஆண்டுக்குள் இந்திய அரசின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை 9 சதவீதம் குறைந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி அரசின் மீது 82 சதவீத மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்று கணக்கெடுப்பு கூறுகிறது. முன்னதாக அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருந்ததாக செய்தி வெளியாகி இருந்தது. தற்போது அது உண்மை இல்லை எனத் தெரியவந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com