காஷ்மீரை உணர்வு ரீதியாக இழந்துவிட்டோம்: யஷ்வந்த் சின்ஹா
காஷ்மீரை உணர்வு ரீதியாக இந்தியா இழந்துவிட்டதாக முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பகுதிக்கு நேரில் சென்று பார்த்தால் அம்மக்கள் இந்தியா மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டது நமக்கு தெரியவரும் என்றும் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். காஷ்மீர் நிலவரத்தை தான் நேரில் சென்று அறிந்த நிலையில் அது குறித்து பேச பிரதமரிடம் நேரம் கேட்டதாகவும் ஆனால் 10 மாதமாக அவர் ஒப்புதல் தரவில்லை என்றும் சின்ஹா தெரிவித்துள்ளார். இந்தியாவில் எந்த ஒரு பிரதமரும் தன்னை இவ்வாறு நடத்தியதில்லை என்றும் சின்ஹா குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய பொருளாதாரம் குறித்து யஷ்வந்த் சின்ஹா விமர்சித்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியிருந்த நிலையில் தற்போதைய அவரது கருத்து மேலும் சர்ச்சைகளை கிளப்பும் எனத் தெரிகிறது.