பங்களாதேஷுக்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பரிசாக வழங்குகிறது இந்தியா

பங்களாதேஷுக்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பரிசாக வழங்குகிறது இந்தியா
பங்களாதேஷுக்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பரிசாக வழங்குகிறது இந்தியா

பங்களாதேஷுக்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இந்தியா இலவசமாக கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனா தடுப்பூசிகளை விநியோகிப்பதில் நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாகவும், சம அளவில் மருந்துகளை பகிர்ந்து அளிப்பதில் தோல்வியை சந்தித்து வருவதாகவும் கவலை தெரிவித்தார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம்.

அதிக வருமானம் உள்ள 49 நாடுகளில் 3.90 கோடிக்கும் அதிகமான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ள அதே நேரத்தில் ஒரு பின்தங்கிய நாட்டில் 25 மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலை மாற வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், பங்களாதேஷுக்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்தை இலவசமாக வழங்க இந்தியா ஒப்புதல் அளித்திருப்பதை அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி செய்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 20 லட்சம் ஆக்ஸ்ஃபோர்டு ஆஸ்ட்ரோஜெனகா தடுப்பூசிகளை பங்களாதேஷுக்கு இந்தியா ’பரிசாக’ அனுப்ப இருக்கிறது. இதற்காக பிரதேயமாக மாற்றியமைக்கப்பட்ட விமானம் 20 லட்சம் டோஸ் மருந்துகளையும் ஏற்றிக்கொண்டு புதன்கிழமை தாகா வந்தடையவுள்ளது என தெரிவித்திருக்கிறார். இந்த மருந்துகள் தாகாவிலுள்ள இந்திய உயர் கமிஷன் மூலமாக பங்களாதேஷ் அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த தகவலை பங்களாதேஷின் சுகாதார சேவை இயக்குநரகமும் உறுதி செய்திருக்கிறது. அதன்படி ஜனவரி 20ஆம் தேதி இந்தியாவிலிருந்து சிறப்பு விமானம்மூலம் கொண்டு செல்லப்படும் மருந்துகள் தாகாவில் உள்ள ஹஸ்ராத் ஷாஜாலால் விமான நிலையத்தை சென்றடையும் என தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com