இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு; 6 லட்சத்தை நெருங்குகிறது

இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு; 6 லட்சத்தை நெருங்குகிறது

இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு; 6 லட்சத்தை நெருங்குகிறது
Published on

கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,05,85,641 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,13,913 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 57,95,656 ஆக உள்ளது. 

இதில் அமெரிக்கா அதிகமாக பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதாவது அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,27,853 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,30,122 ஆக உள்ளது. இதற்கு அடுத்த அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. 14,08,485 பேர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 59,656 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

மூன்றாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. அங்கு 6,47,849 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,320 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொருத்தவரை 5,85,792 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,410 ஆக உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் லண்டன், ஸ்பெயின், பெரு ஆகிய நாடுகள் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com