இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் பாதை - எங்கு தெரியுமா?

இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் பாதை - எங்கு தெரியுமா?
இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் பாதை - எங்கு தெரியுமா?

இந்தியாவில் முதல்முறையாக கொல்கத்தாவில் நீருக்கடியில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பாதை  இன்னும் ஓராண்டுக்குள் நிறைவடையும் என்று கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. கொல்கத்தாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் ஹூக்ளி ஆறு வழியே இந்த மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த மெட்ரோ பாதையின் நீளம் 16.55  கிலோ மீட்டர். 9.30 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேல் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளதாகவும், மீதமுள்ள 7.25 கிலோ மீட்டர் நீளத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும்  கொல்கத்தா மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது வேகமாக நடைபெற்று வரும் இந்த மெட்ரோ ரயில் சேவை பணி அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீருக்கு அடியில் இந்த மெட்ரோ ரயில் தொடங்கப்படும் பட்சத்தில் பயணிகளின் பயண நேரத்தை அது கணிசமாகக் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 'சொந்தமாக கார் கூட இல்லை' - பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com