India - EU trade deal signed
eu - india ஒப்பந்தம்எக்ஸ் தளம்

'அனைத்து ஒப்பந்தங்களின் தாய்' | USக்குப் பதிலடியாக இந்தியா - EU கையெழுத்து.. நன்மை - லாபம் என்ன?

இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
Published on

27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் முடிவாகியுள்ளன. 'அனைத்து ஒப்பந்தங்களின் தாய்' என குறிப்பிடப்படும் இந்த வரலாற்று ஒப்பந்தம், இந்திய பொருட்கள் மீது அதிகவரி விதித்த அமெரிக்காவுக்கு பதிலடியாக பார்க்கப்படுகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் இதுவரை செய்து கொண்ட மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகும்.

27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தகம்

இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. குடியரசு தினவிழாவையொட்டி இந்தியா வந்துள்ள ஐரோப்பிய யூனியன் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான்டர்லெயன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் முடிவாகியுள்ளன. 'அனைத்து ஒப்பந்தங்களின் தாய்' என குறிப்பிடப்படும் இந்த வரலாற்று ஒப்பந்தம், இந்திய பொருட்கள் மீது அதிகவரி விதித்த அமெரிக்காவுக்கு பதிலடியாக பார்க்கப்படுகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் இதுவரை செய்து கொண்ட மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகும். இது இரண்டு பில்லியன் மக்களின் சந்தையை உருவாக்கும் என்றும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் 1.9 பில்லியனுக்கும் அதிகமான நுகர்வோரின் சந்தையை ஒருங்கிணைக்கும். ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களின் ஏற்றுமதியில் 96.6 சதவீதத்திற்கான வரிகள் நீக்கப்படும் அல்லது குறைக்கப்படும், இதனால் ஐரோப்பியப் பொருட்களின் மீதான வரிகளில் ஆண்டுக்கு €4 பில்லியன் வரை சேமிக்கப்படும்.

India - EU trade deal signed
eu - india ஒப்பந்தம்

”இந்திய உற்பத்தி துறைக்கு மிகப்பெரிய ஊக்கம்”

இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம், இருதரப்புக்கும் பெரிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் மோடிஉறுதியளித்துள்ளார். வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவுக்குப் பின் உரையாற்றிய அவர், இருதரப்புக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் தருணம் இது என குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தம் இந்திய உற்பத்தி துறைக்கு மிகப்பெரிய ஊக்கத்தை வழங்கும் எனக் கூறிய பிரதமர், இது முதலீட்டை அதிகரிக்கும் என்றும், புதிய கண்டுபிடிப்பு கூட்டாண்மைகளை உருவாக்கும் எனவும் குறிப்பிட்டார். மேலும், உலக அளவில் விநியோகச்சங்கிலிகளையும், பாதுகாப்பு ஒத்துழைப்பையும் இந்த ஒப்பந்தம் வலுப்படுத்தும் என்றும், மக்களிடையேயான உறவுகளை ஆழப்படுத்தும் எனவும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

அதேபோல், இருபது ஆண்டுகால முயற்சிக்குப் பின் இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே நிறைவேறியிருக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்புக்கும் மிகுந்த பலன் அளிக்கக்கூடியது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என ஐரோப்பிய யூனியனின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா குறிப்பிட்டார். இந்தியா, உலகின் வேகமாக வளர்ந்துவரும் பெரிய பொருளாதார நாடு எனக் கூறிய அவர், வர்த்தக ஒப்பந்தங்கள் விதிகள் சார்ந்த பொருளாதார ஒழுங்கை வலுப்படுத்துகின்றன என்றும் கூறினார். இந்தோ-பசிபிக், ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் நாம் எதிர்கொள்ளும்பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஒன்றிணைந்து செயல்படவும் அன்டோனியோ கோஸ்டா அழைப்புவிடுத்தார்.

India - EU trade deal signed
IND - US வர்த்தக ஒப்பந்தம் | காரணம் மோடியா? கொளுத்திப் போட்ட அமெரிக்கா.. உண்மை என்ன?

இந்தியாவில் விலை குறையும் பொருட்கள்!

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் எந்தெந்தப் பொருட்களின் விலை குறையும் என்பதைப் பார்க்கலாம். இந்த ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய சொகுசு கார்களுக்கு விதிக்கப்பட்ட சதவீத இறக்குமதி வரி 10 சதவீதமாக குறைக்கப்படும். ஆண்டுக்கு இரண்டரை லட்சம் கார்கள் வரை மட்டுமே இந்த வரிச் சலுகையில் இறக்குமதி செய்யமுடியும். இதன்மூலம் பிஎம்டபிள்யூ,பென்ஸ் உள்ளிட்ட உயர்தர கார்களின் விலை பல லட்சங்கள் வரை குறையும். ஆலிவ் ஆயிலுக்கு 45 சதவீதமாக இருந்த வரி முழுமையாக நீக்கப்படுகிறது. பிரீமியம் ஒயின்களுக்கான வரி 150 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகவும், பீர் வகைகளுக்கான வரி 110 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகவும் குறையும். சாக்லேட்டுகள், பிஸ்கட்டுகள், பாஸ்தா, பிரட் மற்றும்செல்லப்பிராணிகளுக்கான உணவுகள் மீதான 50 சதவீத வரி முழுமையாக நீக்கப்படும். பழச்சாறுகள் மீதான வரிநீக்கப்படும். கிவி மற்றும் பேரிக்காய் மீதான வரி 33 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறையும்.

India - EU trade deal signed
x page

ஐரோப்பிய சமையல் பொருட்கள் மற்றும் பானங்கள் இனி மலிவாகக் கிடைக்கும். 90 சதவீத மருத்துவக் கருவிகள், பரிசோதனை எந்திரங்கள் மற்றும் அறுவைசிகிச்சை கருவிகள் மீதான 27.5 சதவீத வரி பூஜ்ஜியமாக குறைக்கப்படுகிறது. மருந்துகள் மீதான 11 சதவீத வரியும் முற்றிலும் நீக்கப்படுகிறது. இதனால் மருத்துவமனைகளில் நவீன சிகிச்சைகளுக்கான செலவுகள் குறைய வாய்ப்புள்ளது. மின்சார உபகரணங்கள் மற்றும் தொழிற்சாலை இயந்திரங்கள் மீதான 44 சதவீத வரி நீக்கப்படுகிறது. தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை குறைவதால், அவற்றின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் விலையும் குறைய வாய்ப்புள்ளது. பிளாஸ்டிக் மற்றும் ரசாயனங்கள் இனி வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்படும். இரும்பு மற்றும் எஃகு மீதான 22% வரையிலான இறக்குமதி வரி பெரும்பாலும் முழுமையாக நீக்கப்படும். இது உள்கட்டமைப்பு , கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளுக்குப் பெரிதும் உதவும். விமானம் மற்றும் விண்வெளி தொழில்நுட்ப பாகங்கள் மீதான 11 சதவீத வரி நீக்கப்படும். இது விமானக் கட்டணங்கள் குறைய வழிவகுக்கலாம். இந்த வரிக்குறைப்பு படிப்படியாக நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

India - EU trade deal signed
27 நாடுகள் கொண்ட அமைப்புடன் இந்தியா ஒப்பந்தம்.. இந்திய பொருட்களுக்கு உருவாகும் புதிய வாய்ப்புகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com