ஜி20 மாநாட்டில் டேட்டா ஒப்பந்தத்தை நிராகரித்தது இந்தியா !

ஜி20 மாநாட்டில் டேட்டா ஒப்பந்தத்தை நிராகரித்தது இந்தியா !

ஜி20 மாநாட்டில் டேட்டா ஒப்பந்தத்தை நிராகரித்தது இந்தியா !

தேச எல்லைகளைத் தாண்டி கூடுதல் பாதுகாப்புடன் டேட்டா செல்ல அனுமதிக்கும் வகையில் ஜி20 உச்சி மாநாட்டின் போது கொண்டுவரப்பட்ட ஒசாகா டிராக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்துள்ளது.

ஜப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் இறுதியில் ஒசாகா டிராக் ஒப்பந்தத்தை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே முன்மொழிந்தார். அதில் 24 நாடுகள் கையெழுத்திட்டன. ஆனால் இந்தியா, இந்தோனேஷியா, எகிப்து மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகள் அதில் கையெழுத்திட மறுத்துவிட்டன. சர்வதேச அளவில் டேட்டா செல்ல தனிநபர் தகவல் பாதுகாப்பு, அறிவுசார் சொத்து உரிமை மற்றும் சைபர் செக்யூரிட்டி ஆகியவற்றை உறுதி செய்யும் ஒரே மாதிரியான சட்டவிதிகளை உருவாக்குவது ஒசாகா டிராக் ஒப்பந்தத்தின் நோக்கம். 

ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் டேட்டா உள்ளூரிலேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. மேலும் டேட்டா தொடர்பான விதிகளை சர்வதேச வர்த்தக அமைப்புதான் முடிவு செய்ய வேண்டும் என இந்தியா கூறி வருகிறது. மேலும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது வரவு தொடர்பான விவரங்களை இந்தியாவிலேயே சேமித்து வைக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. அதற்கு கூகுள், மாஸ்டர்கார்ட், விசா, அமேசான் போன்ற நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் பேசியபோது, டேட்டா புது வகையான சொத்து என்பதை அறிந்திருப்பதாக அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com