சீன எல்லையில் அதிநவீன அமெரிக்க ஆயுதங்களை நிறுத்திவைத்துள்ள இந்தியா

சீன எல்லையில் அதிநவீன அமெரிக்க ஆயுதங்களை நிறுத்திவைத்துள்ள இந்தியா
சீன எல்லையில் அதிநவீன அமெரிக்க ஆயுதங்களை நிறுத்திவைத்துள்ள இந்தியா

சீன எல்லையில் இந்தியா அதிநவீன அமெரிக்க ஆயுதங்களை நிறுத்திவைத்துள்ளது.

புறஊதா கதிர்கள் உதவியுடன் துல்லியமாக தாக்க உதவும் சிறு ரக பீரங்கிகள், துப்பாக்கிகள், அதிநவீன கண்காணிப்பு சாதனங்களை இந்தியா தயார் நிலையில் வைத்துள்ளது. இவை தவிர ஆயுதங்களை விரைவாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல உதவும் சினூக் ரக ஹெலிகாப்டர்களும் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே அண்மையில் அமெரிக்காவிலிருந்து பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர இந்திய தயாரிப்பு ஏவுகணைகளும் வைக்கப்பட்டுள்ளன.

எல்லையில் உள்ள அனைத்து படைப்பிரிவுகளும் முழுமையான தயார் நிலையில் இருப்பதாக ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்தார். கடந்தாண்டு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து எல்லை பதற்றத்தை தணிக்க இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் எல்லையில் முழு இயல்பு திரும்பாத நிலையில் இரு தரப்பும் தங்கள் வலிமையை அதிகரித்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com