BOURBON விஸ்கி | இறக்குமதி வரியை 50% குறைத்த இந்தியா!
வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் மதுபானங்களில் நான்கில் ஒரு பங்கை பர்பன் ஸ்காட்ச் விஸ்கி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்விஸ்கியை அமெரிக்காவிலிருந்துதான் இந்தியா பெருமளவு இறக்குமதி செய்கிறது. இதுதவிர அமீரகம், சிங்கப்பூர், இத்தாலியிலிருந்தும் அதிகம் இறக்குமதியாகிறது. அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்ற நெருக்கடி எழுந்துள்ள நிலையில் இதைச் செய்ய தவறினால் தங்கள் பொருட்களுக்கு வரியை அதிகரிப்போம் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியா மிக அதிக இறக்குமதி வரி விதிக்கும்பொருட்களில் மதுபானமும் ஒன்றாகும். இதனால் இந்தியாவில் மதுபான இறக்குமதி வரியை குறைக்க பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. லண்டனில் 2 ஆயிரத்து 400 ரூபாயாக உள்ள தங்கள் ஷிவாஸ் ரீகல் ஸ்காட்ச் விஸ்கியின் விலை இந்தியாவில் இறக்குமதி வரி காரணமாக 6 ஆயிரம் ரூபாயாக இருப்பதாக அதை தயாரிக்கும் பெர்னாட் ரிக்கார்டு நிறுவனம் தெரிவித்திருந்தது.