\
இந்தியா: 2 லட்சத்தை கடந்தது கொரோனா இறப்பு

இந்தியா: 2 லட்சத்தை கடந்தது கொரோனா இறப்பு

இந்தியா: 2 லட்சத்தை கடந்தது கொரோனா இறப்பு
Published on

நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் மொத்த பாதிப்பு ஒரு கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 293 பேர் கொரோனாவால் இறந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 2 லட்சத்து ஆயிரத்து 187 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 162 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் ஒரு கோடியே 48 லட்சத்து 17 ஆயிரத்து 371 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 29 லட்சத்து 78 ஆயிரத்து 709 பேர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com