\
சீன தாக்குதல்: முப்படை தலைமை தளபதியுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை

சீன தாக்குதல்: முப்படை தலைமை தளபதியுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை

சீன தாக்குதல்: முப்படை தலைமை தளபதியுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை
Published on

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நேற்று சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இந்திய அதிகாரி உட்பட 3 பேர் இந்திய தரப்பில் வீரமரணம் அடைந்துள்ளனர். சீனா- இந்தியா இடையே தொடர்ச்சியாக எல்லைப் பிரச்னை இருந்து வரும் நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தையும் நடந்தது. இந்நிலையில் சீன ராணுவத்தின் தாக்குதலில் இந்தியா தரப்பில் 3 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

சீன எல்லையில் வன்முறை ஏற்பட்டதாகவும் அதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com