\
இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு
Published on

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனாவின் கோரத் தாண்டவம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,91,330 ஆக அதிகரித்துள்ளது. இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,20,121 ஆக உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்து 1,01,139 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,163 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 39,173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com