''இது ஒரு முக்கிய திருப்புமுனை'' - கொரோனா தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி ட்வீட்!

''இது ஒரு முக்கிய திருப்புமுனை'' - கொரோனா தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி ட்வீட்!
''இது ஒரு முக்கிய திருப்புமுனை'' - கொரோனா தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி ட்வீட்!

கொரோனா பெருந்தொற்றை அழிக்கும் தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் உலகளவிலான விஞ்ஞானிகள் மும்முரமாக உள்ளனர். இதில் சில நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன. இந்தியாவிலும் சில மருந்தாய்வகங்களில் தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகள் நடந்தன. இந்நிலையில் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம். இதனை கொண்டாடும் விதமாக பெருமையோடு ட்விட்டரில் மூன்று ட்வீட்களை செய்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. 

“இந்தியாவை கொரோனா இல்லாத ஆரோக்கியமான பாதைக்கு திரும்ப செய்யும் வகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் மற்றும் பாரத் பயோடெக்கின் அவசர கால தடுப்பூசி பயன்பாட்டிற்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது. இது ஒரு முக்கிய திருப்புமுனை. இதை இந்தியா பெருமிதமாக கொண்டாடும். இந்த மருந்து உருவாக்கும் பணியில் அல்லும் பகலும் அயராது உழைப்பில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வறிஞர்களுக்கும் வாழ்த்துகள். 

அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள இந்த இரண்டு தடுப்பூசிகளும் இந்தியாவில்  உருவாக்கப்பட்டவை என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும். சுயசார்பு இந்தியாவின் வெளிப்பாடாக இது இருக்கிறது. 

மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், விஞ்ஞானிகள், காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அனைத்து கொரோனா முன்கள வீரர்களுக்கும் நன்றியை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன். நாட்டு மக்கள் பலரது உயிர்களைக் காப்பாற்றியதற்காக நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com