உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 6-வது இடத்தில் உள்ளது.
கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73,23,803 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,13,733 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 36,03, 991 ஆக உள்ளது.
இதில் அதிகபட்சமாக வழக்கம்போல் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதாவது அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,45,549 ஆக உள்ளது. இதைத்தொடர்ந்து பிரேசில் இரண்டாவது இடத்திலும், ரஷ்யா, லண்டன், ஸ்பெயின் அடுத்தடுத்து இடத்திலும் உள்ளது.
இந்தியா கொரோனா பாதிப்பில் 6வது இடத்தில் உள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,76,146 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,750 ஆக உள்ளது. சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,34,670 ஆக உள்ளது.