லடாக் எல்லைப் பகுதியிலிருந்து இந்திய - சீன படைகள் வாபஸ்

லடாக் எல்லைப் பகுதியிலிருந்து இந்திய - சீன படைகள் வாபஸ்
லடாக் எல்லைப் பகுதியிலிருந்து இந்திய - சீன படைகள் வாபஸ்

கிழக்கு லடாக்கை ஒட்டிய எல்லைப்பகுதியில் இருந்து இந்தியாவும் சீனாவும் தங்கள் படைகளை 15 மாதங்களுக்கு பிறகு வாபஸ் பெற்றுள்ளன.

ஆகஸ்ட் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் கோக்ரா என்ற இடத்திலிருந்து இரு தரப்பும் தங்கள் படைகளை விலக்கிக்கொண்டு பழைய முகாம்களை சென்றடைந்ததாக இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு படைகளும் கோக்ரா பகுதியில் ஏற்படுத்தியிருந்த தற்காலிக கட்டமைப்பு வசதிகளும் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இதை பரஸ்பரம் இரு தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தற்போது கோக்ரா பகுதியில் 15 மாதங்களுக்கு முன்பிருந்த பழைய நிலை திரும்பியுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

லடாக்கை ஒட்டிய பகுதியில் இந்திய - சீனப் படைகள் இடையே கடந்தாண்டு மே மாதத்தில் இருந்தே மோதல் போக்கு தொடங்கிவிட்டது. கடந்தாண்டு ஜூன் 15ம் தேதி இரு நாட்டு படைகள் இடையே கடும் மோதல் மூண்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் சீன வீரர்கள் 43 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளின் பலனாக இரு தரப்பும் தங்கள் படைகளை சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து படிப்படியாக திரும்பப் பெற்று வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com