தீயணைப்புத் துறையில் முதல்பெண் - வென்று காட்டிய ஹர்சினி 

தீயணைப்புத் துறையில் முதல்பெண் - வென்று காட்டிய ஹர்சினி 

தீயணைப்புத் துறையில் முதல்பெண் - வென்று காட்டிய ஹர்சினி 
Published on

தீயணைப்புத் துறையில் முதல்பெண் - வென்று காட்டிய ஹர்சினி 

பெண்கள் இந்தப் பூமியில் ஆணுக்கு நிகர் சமானம் என்ற நிலை உருவாகி பலகாலம் ஆகிவிட்டது. இனிமேல் ஆண் என்றும் பெண் என்றும் பேதங்கள் இல்லை. அப்படிதான் இந்தப் பூமி தன்னை இப்போது மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையை எட்ட பெண்கள் அதிகம் போராட்டி இருக்கிறார்கள். முன்னேற்றம்தான் அவர்களின் மூலதனம். அப்படி ஒரு பெண் தன் முயற்சியை மூலதனமாக்கி முன்னேறி வென்று காட்டி இருக்கிறார். யார் அந்தப் பெண்? வாருங்கள் பார்க்கலாம். 

நாக்பூரை சேர்ந்த ஹர்சினி கனேகர்தான் அந்தப் பெண். பள்ளிப்படிப்பை முடித்த ஹர்சினி, தனது இளங்கலை படிப்பின் போது தேசிய மாணவர் படையில் சேர்ந்தார். அப்போது யதேட்சையாக இந்தியாவின் முதல் பெண் விமானியான ஷிவானி குல்கர்னியின் கட்டுரையை அவர் படிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரையின் தாக்கம் ஹர்சினி அடி மனத்தில் வெள்ளம் போய் போய் பாய்ந்துள்ளது. ஷிவானி அணிந்திருந்த உடையை போன்று தானும் ஒரு அர்ப்பணிப்பு மிக்க துறையில் ஈடுபட்டு சாதனை புரிய வேண்டும் என கனவு கண்டுள்ளார். மனதில் விழுந்த விதை பின்பு விலை மதிக்க முடியாத விருட்சமாகி இருக்கிறது. 

இளங்கலை படிப்பை முடித்த கையோடு ஹர்சினி, அடுத்தாக எம்.பி.ஏ. வில் சேர்ந்தார். படிப்பது எம்.பி.ஏ என்றாலும் அவரது கவனம் முழுவதும் சாதனை பற்றி சதா இருந்துள்ளது. அப்போதுதான் தனது தோழி மூலமாக நாக்பூரில் உள்ள தேசிய தீயணைப்பு துறையில் வழங்கப்படும் பயிற்சி வகுப்பு பற்றி தெரிந்து கொண்டிருக்கிறார். செய்தி அறிந்த அடுத்தநாளே தோழியுடன் கிளம்பி நுழைவு தேர்வையும் எழுதி இருக்கிறார். அத்துடன் எம்.பி.ஏ படிப்பை விடாமல் தொடர்ந்த ஹர்சினிக்கு, சில வாரங்களிலேயே தீயணைப்பு கல்லூரியில் இருந்து, அழைப்பு கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதம் தனது கைக்கு வந்த தருணம்தான் தனது வாழ்வின் உன்னதமான தருணம் என்கிறார் ஹர்சினி. 

தனது கனவின் பயணம் தொடங்கி விட்டது என்று மகிழ்ச்சியோடு கல்லூரிக்கு சென்ற ஹர்சினிக்கு காத்திருந்தது, ஒரு வித்தியாசமான அனுபவம். ஏன் என்றால் அந்தக் கல்லூரியில் அதுவரை ஒரு பெண் கூட பயிற்சி பெற்றதில்லை. கல்லூரி முழுவதும் ஆண்களின் ஆதிக்கத்தால் நிரம்பி வழிந்தது என்பதால் நிர்வாகம் முதலில் ஹர்சினியை சேர்த்துக்கொள்ள தயங்கியுள்ளது. அதன் பின்னர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு அனுமதி பெற்று ஹர்சினியை இணைத்து கொண்டது. மேலும் மூன்றரை வருடங்கள் ஹர்சினியை கல்லூரி விடுதியில் தங்க வைத்தால் நடைமுறை சிக்கல்கள் ஏற்படும் என்பதை உணர்ந்த நிர்வாகம் அவரை வீட்டிலிருந்து வந்து பயிற்சி பெற மட்டும் தனிச் சலுகை வழங்கியது.


நிர்வாகத்தின் சார்பில் ஹர்சினிக்கு அளிக்கபட்ட ஒரே சலுகை அது மட்டும்தான். அது தவிர பெண் என்பதற்காக கல்லூரி நிர்வாகம் சார்பில் அவருக்கு வேறு எந்தச் சலுகையும் வழங்கப்படவில்லை. ஹர்சினி அதை எதிர்பார்க்கவும் இல்லை. தினமும் அதிகாலை வீட்டிலிருந்து கிளம்பி எல்லோருக்கும் முன்புபாக பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதை நடைமுறையாக கொண்டு வந்துள்ளார். கல்லுரியில் சேர்ந்த முதல் பெண் என்பதால், பயிற்சியில் ஆண்களுடன் ஒப்பிடும் போது, தான் எப்போதும் பின் தங்கி விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார் ஹர்சினி. 

மேலும் தான் பின் தங்கிவிட்டால், அது தனக்கு அடுத்து துணிச்சலுடன் பிற்காலத்தில் வரும் பெண்களுக்கு தவறான முன் மாதிரியாக அமைந்துவிடக்கூடும் என்பதால் தவம் போல் இருந்து பயிற்சி பெறுவதில் கவனம் செலுத்தியுள்ளார். இவ்வாறு வெற்றிகரமாக பயிற்சியை முடித்த ஹர்சினி, கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் தீயணைப்பு வீராங்கனையாக தனது பெயரை வரலாற்றில் பதிய வைத்திருக்கிறார். தற்போது 16 ஆண்டுகள் தீயணைப்பு துறையில் பல அபாயகரமான சூழ்நிலைகளை வெற்றிகரமாக கடந்து மும்பை தீயணைப்புதுறை பயிற்சி அதிகாரியாக இருக்கிறார் ஹர்சினி. 

இது மட்டுமல்ல; ஹர்சினிக்கு பைக் ஓட்டுவதிலும் ஆர்வம் அதிகம். இமயமலையிலுள்ள அபாயகரமான சாலைகளில் எல்லாம் பைக் ஓட்டி இருக்கிறார் இந்தச் சாகச விரும்பி ஹர்சினி. எப்படி இவ்வளவு தைரியம்? அதற்கு ஹர்சினியிடம் பதில் இருக்கிறது. “பைக்கை ஓட்டுவது ஆணா, பெண்ணா என்று அதற்குத் தெரியாது. யார் ஓட்டினாலும் பைக் ஓடும். அதை போலதான் நமது வேலையும், எதற்கும் திறமையான செயல்தான் முக்கியம்” புதிய வழியை காட்டுகிறார் இந்த ஹர்சினி.  


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com