இந்தியா விரும்பினால் ஆயுத விற்பனைக்கு தயார் - ரஷ்ய வெளியுறவு அமைச்சர் உறுதி

இந்தியா விரும்பினால் ஆயுத விற்பனைக்கு தயார் - ரஷ்ய வெளியுறவு அமைச்சர் உறுதி
இந்தியா விரும்பினால் ஆயுத விற்பனைக்கு தயார் - ரஷ்ய வெளியுறவு அமைச்சர் உறுதி

இந்தியா விரும்பினால் ஆயுதம் உள்ளிட்ட தளவாடங்களை தங்கள் நாட்டில் இருந்து வழங்க தயாராக இருப்பதாக டெல்லி வந்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ், டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.

அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து அவர் விரிவாக விவாதித்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த லவ்ரோவ், இந்தியா மற்றும் ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கைகள் சுதந்திரமான, நாட்டின் நலனை மையமாக கொண்டவை என்பதால், இரு நாடுகளும் நேர்மையான நண்பர்களாக இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியா விரும்பினால் ஆயுதம் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை விநியோகிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இந்தியா - ரஷ்யா இடையே மிகச்சிறந்த உறவு இருப்பதாக கூறிய செர்ஜி லவ்ரோவ், எந்த அழுத்தமும் இந்தியா உடனான ரஷ்யாவின் உறவை பாதிக்காது எனத் தெரிவித்தார். அமெரிக்காவின் கொள்கையை மற்ற நாடுகள் பின்பற்ற வேண்டும் என விரும்புவாக லவ்ரோவ் கூறினார்.

சர்வதேச அரங்கில் இந்தியா ஒரு முக்கியமான நாடு என்று கூறியுள்ள செர்ஜி லவ்ரோவ், உலக அளவிலான பிரச்னைகளில் இந்தியா நியாயமான முறையில் கருத்து தெரிவித்தால் அதனை ஆதரிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com