இந்தியா
சுதந்திர தின விழா: டெல்லிவாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை
சுதந்திர தின விழா: டெல்லிவாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை
சுதந்தர தினத்தை ஒட்டி டெல்லிவாசிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அம்மாநில காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
வருகிற 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் சந்தேகத்துக்கு இடமான நபர்களையோ பொருட்களையோ கண்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் டிவிட்டரில் வீடியோ பதிவாக பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சுதந்தர தின விழாவின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாவண்ணம் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. டெல்லியில் பலூன்கள், பாரா கிளைடர்கள் போன்றவற்றை பறக்க விட கடந்த மாதம் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது