சுதந்திர தினம்:'சமூதாயத்தின் ஹீரோக்கள் சிறப்பு விருந்தினர்கள்'-டெல்லியில் பலத்த பாதுகாப்பு

சுதந்திர தினம்:'சமூதாயத்தின் ஹீரோக்கள் சிறப்பு விருந்தினர்கள்'-டெல்லியில் பலத்த பாதுகாப்பு

சுதந்திர தினம்:'சமூதாயத்தின் ஹீரோக்கள் சிறப்பு விருந்தினர்கள்'-டெல்லியில் பலத்த பாதுகாப்பு

டெல்லி செங்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினத்தையொட்டில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சியின்போது அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் டெல்லி செங்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

செங்கோட்டை அருகே உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சுமார் 400 சிசிடிவி கேமராக்களை பொருத்தி செங்கோட்டை சுற்றிலும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் 76ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றுகிறார்.

நாடு சுதந்திரம் அடைந்து நேற்றுடன் 75ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. 76ஆவது சுதந்தின தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக தலைநகர் டெல்லியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். முன்னதாக பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்கிறார்.

சுதந்திர தினவிழாவில் பங்கேற்க, அங்கன்வாடி பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள் என பொதுவாகக் கவனிக்கப்படாத சமுதாயத்தின் ஹீரோக்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திர தின கொண்டாட்டத்தை யொட்டி டெல்லி செங்கோட்டை பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டையைச் சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் பரப்பில், பட்டங்கள், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com