கள்ளநோட்டு புழக்கத்துக்கு பணமதிப்பு நீக்கம் காரணமா?

கள்ளநோட்டு புழக்கத்துக்கு பணமதிப்பு நீக்கம் காரணமா?
கள்ளநோட்டு புழக்கத்துக்கு பணமதிப்பு நீக்கம் காரணமா?

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு அதிகளவில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து வருவதாக மத்திய நுண்ணறிவு பிரிவு ஆய்வறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அதிகளவில் கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரித்தும், அதிகளவில் கள்ள நோட்டுகள் பிடிபட்டு வருவதாக மத்திய அரசின் ஒரு அங்கமான நிதி நுண்ணறிவு பிரிவு தெரிவித்துள்ளது. கள்ள நோட்டு மற்றும் கறுப்பு பண ஒழிப்பு, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செல்வதை தடுத்தல் உள்ளவற்றுக்காக பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்திருந்தது. மேலும் பணமதிப்பு நீக்கத்திற்கு பின் சந்தேகத்திற்கு இடமான பணப்பரிமாற்றங்களின் அளவும் 480 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com