கொரோனா பரவல்: பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

கொரோனா பரவல்: பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

கொரோனா பரவல்: பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்
Published on

கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

காலை 10.30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

கூட்டத்தில் இந்தியாவில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com