Increase in Senior citizen homes
model imagemeta ai

மூத்த குடிமக்களுக்கான குடியிருப்பு திட்டங்கள்.. இந்தியாவில் அதிகரிப்பு!

இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான குடியிருப்புகள் 11 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published on
Summary

இந்தியாவில் முதியவர்களுக்கான குடியிருப்புகள் 2014ல் 7,147 இருந்து 2023ல் 22,157 ஆக அதிகரித்துள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 25,500 வீடுகள் கட்டப்படும் எனவும், இதன் மதிப்பு 39 ஆயிரம் கோடி ரூபாய் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இளம் வயதிலேயே நிதி திட்டமிடல், ஓய்வூதிய திட்டங்கள் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

கூட்டுக்குடும்ப முறை சிதைந்து தனிக்குடித்தனங்களே பெருகி விட்ட நிலையில் பல வீடுகளில் முதியோர் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இது போன்ற நிலையில் முதியவர்களுக்கான பிரத்யேக குடியிருப்புகளை SENIOR CITIZENS HOME என்ற பெயரில் கட்டும் போக்கு இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. 2014ஆம் ஆண்டு 7 ஆயிரத்து 147 முதியோர் குடியிருப்புகள் இருந்த நிலையில் தற்போது 22 ஆயிரத்து 157 ஆக அதிகரித்துள்ளது. முதியோருக்கான தனித்த குடியிருப்புகள் இன்னும் வேகம் பெற்றால் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 25 ஆயிரத்து 500 வீடுகள் கட்டப்படும் என்றும் இதன் மதிப்பு 39 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும் ஆய்வுகள் வெளியாகியுள்ளன.

Incresed in indian senior housing
model imagemeta ai

Association of Senior Living India என்ற அமைப்பும் JLL இந்தியா என்ற ரியல் எஸ்டேட் நிறுவனமும் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன. இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் எண்ணிக்கை 25 ஆண்டுகளில் தற்போதுள்ளதைவிட இருமடங்காக உள்ளது. இத்தொழில்துறையின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது. அடிப்படை வசதிகளுடன் நல்ல கவனிப்புடன் கூடிய சுதந்திரமான வாழ்க்கை, மருத்துவ மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் போன்றவற்றால் ஓய்வுகாலத்திற்கு பிந்தைய வாழ்க்கையை இது போன்ற குடியிருப்புகளில் மூத்த குடிமக்கள் கழிக்க விரும்புவதாக அந்த ஆய்வு கூறுகிறது. இளம் வயதிலேயே தங்கள் முதுமைக்காலத்திற்கான நிதி தேவைகளுக்கு திட்டமிடுவது, ஓய்வூதியத்திற்கான திட்டங்கள் அதிகரிப்பும் மூத்த குடிமக்களுக்கான வீடுகளுக்கான தேவையை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

Increase in Senior citizen homes
‘மாவீரன்’ பாணியில் உதிரும் கட்டடம்?சாலிகிராமம் JAINS WESTMINSTER குடியிருப்பு வாசிகள் பகீர் தகவல்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com