\
தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
Published on

நாளை முதல் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை தொடங்கியது முதல், மழைப்பொழிவு தொடர்ச்சியாக இல்லாமல் இருந்தது. இந்நிலையில், நாளை முதல் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைய உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா, அருணாச்சல பிரதேசம், மேகாலயா, அசாம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், அப்பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. லட்சத்தீவு, மத்திய மேற்கு அரபிக் கடல், கேரளா மற்றும் கர்நாடகா ஒட்டிய கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com