\
பீகாரில் டீசலில் ஓடும் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கத்தடை

பீகாரில் டீசலில் ஓடும் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கத்தடை

பீகாரில் டீசலில் ஓடும் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கத்தடை
Published on

பீகார் மாநிலம் பாட்னாவில் வெள்ளிக்கிழமை முதல் டீசலை எரிபொருளாகக் கொண்டு ஓடும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாட்னாவில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு டீசலை எரிபொருளாகக் கொண்ட பேருந்துகள், ஆட்டோக்களை இயக்குவதற்கு தடை விதிக்க அம்மாநில அரசு முடிவெடுத்தது. ஆனால், கொரோனா காரணமாக அந்த முடிவு தள்ளிப்போனது. இந்த நிலையில், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் டீசலில் இயங்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களுக்கு தடை விதிப்பதாக அம்மாநிலத்தின் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இந்த முடிவால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ, பேருந்து ஓட்டுநர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com