\
“ஆதாருடன் பான் கார்டை இணைக்க மார்ச் 31, 2022 கடைசி நாள்” - வருமான வரித்துறை

“ஆதாருடன் பான் கார்டை இணைக்க மார்ச் 31, 2022 கடைசி நாள்” - வருமான வரித்துறை

“ஆதாருடன் பான் கார்டை இணைக்க மார்ச் 31, 2022 கடைசி நாள்” - வருமான வரித்துறை
Published on: 

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31, 2022 நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக செப்டம்பர் 30 இணைப்புக்கான அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க தவறினால் பயனர்களின் பான் கார்ட் முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

நாடாளுமன்றத்தில் 2021 நிதி மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க தவறும் பயனர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசு கால நீட்டிப்பு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது வருமான வரித்துறை. நான்காவது முறையாக ஆதார் - பான் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com