\
மாமியாரை மாடியிலிருந்து தள்ளிவிட்ட மருமகள்

மாமியாரை மாடியிலிருந்து தள்ளிவிட்ட மருமகள்

மாமியாரை மாடியிலிருந்து தள்ளிவிட்ட மருமகள்
Published on

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சொத்தை தன் பெயரில் எழுதி வைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மாமியாரை மாடியிருந்து கீழே தள்ளிவிட்ட மருமகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டதால் கை எலும்பு முறிந்த நிலையில் துடித்துக்கொண்டிருந்த அந்த 85வயது மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரின் நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டதால் அவரின் உள்உறுப்புகளும் சேதமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் மூதாட்டி அளித்த தகவலின் பேரில் மருமகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் தாங்கள் வசித்து வரும் வீட்டை அவரின் பெயரில் எழுதி வைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மருமகள் இவ்வாறு செய்தது தெரியவந்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com