உ.பி: பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழப்பு; பிரதமர் மோடி இரங்கல்

உ.பி: பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழப்பு; பிரதமர் மோடி இரங்கல்
உ.பி: பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழப்பு; பிரதமர் மோடி இரங்கல்
Published on
உத்தரப் பிரதேசத்தில் அதிவேகமாக சென்ற லாரி, பேருந்து மீது மோதியதில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹரியானாவில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பீகார் நோக்கி சென்ற பேருந்து, பழுது ஏற்பட்டதன் காரணமாக உத்தரப் பிரதேச மாநிலம் பாரபங்கி என்ற இடத்தில் நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது பேருந்துக்குள் சிலரும் சாலையோரம் சிலரும் படுத்திருந்தனர். அந்த வழியாக வேகமாக வந்த லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியதில் 18 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உத்தரப் பிரதேச முதல்வருடன் பேசியுள்ளதாகவும், காயமடைந்த அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com