பாஜகவில் இணைந்த 4 தெலுங்கு தேசம் மாநிலங்களவை உறுப்பினர்கள்

பாஜகவில் இணைந்த 4 தெலுங்கு தேசம் மாநிலங்களவை உறுப்பினர்கள்

பாஜகவில் இணைந்த 4 தெலுங்கு தேசம் மாநிலங்களவை உறுப்பினர்கள்
Published on

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 4 மாநிலங்களவை உறுப்பினர்கள், பாஜகவில் இணைந்துள்ளனர். 

அண்மையில் நிறைவடைந்த ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி பின்னடவை சந்தித்தது. ஆந்திராவில் ஆட்சியை பறிகொடுத்த நிலையில், மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மட்டுமே தெலுங்கு தேசம் வெற்றி பெற்றது. 

இந்நிலையில் திடீர் திருப்பமாக, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகினர். 

எம்.பி.க்கள், ஒய்.எஸ்.சவுத்ரி, சி.எம்.ரமேஷ், டி.ஜி.வெங்கடேஷ், சி.எம்.ராவ் ஆகியோர் மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவை சந்தித்து, கட்சி விலகல் கடிதத்தை அளித்தனர். இதைத்தொடர்ந்து, 4 பேரும், டெல்லியில் பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

மாநிலங்களவையில் தெலுங்கு தேசத்துக்கு 6 எம்.பி.க்கள் உள்ள நிலையில், 4 பேர் கட்சி மாறியுள்ளதால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச்சட்டம் பாயாது எனத் தெரிகிறது. இதனிடையே, எம்.பி.க்கள் கட்சி மாறியதற்கு பாஜகவே காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ள சந்திரபாபு நாயுடு, கட்சி இதுபோன்ற பல நெருக்கடிகளை சந்தித்து வந்துள்ளதாகவும், தொண்டர்களும் நிர்வாகிகளும் கவலைப்படத் தேவையில்லை என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். 

தெலுங்கு தேச எம்பிக்கள் இணைந்ததை அடுத்து மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 75 ஆக அதிகரித்துள்ளது 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com