\
உறவினரை கொலை செய்து 10 துண்டுகளாக வெட்டி நெடுஞ்சாலையில் வீசிய நபர் கைது

உறவினரை கொலை செய்து 10 துண்டுகளாக வெட்டி நெடுஞ்சாலையில் வீசிய நபர் கைது

உறவினரை கொலை செய்து 10 துண்டுகளாக வெட்டி நெடுஞ்சாலையில் வீசிய நபர் கைது
Published on

ராஜஸ்தான் மாநிலத்தில் 32 வயது நபர் ஒருவர் தனது உறவினரை கொலை செய்து சடலத்தை 10 துண்டுகளாக வெட்டி நெடுஞ்சாலையில் வீசி உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அருண் என்ற 32 வயது நபர் தனது தந்தை சகோதரி மற்றும் உறவினருடன் வசித்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் 11ஆம் தேதி அருணின் தந்தை மற்றும் சகோதரி ஊருக்கு சென்று விட, அருண் டெல்லி செல்வதற்கு முயற்சி செய்து உள்ளார் ஆனால் அதற்கு அவரது உறவினர் சரோஜ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்ற சுத்தியலை கொண்டு சரோஜை அருண் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த சரோஜ் அங்கேயே உயிரிழந்தார். இதையடுத்து சரோஜின் உடலை மார்பில் கல் அறுக்கும் எந்திரத்தைக் கொண்டு 10 துண்டுகளாக வெட்டி அதை பக்கெட் மற்றும் சூட்கேசுகளில் அடைத்து ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை மற்றும் புறநகர் பகுதிகளில வீசி உள்ளார். பிறகு காவல்துறையினரிடம் தனது உறவினரை காணவில்லை என புகார் அளித்து மற்றவர்களுடன் சேர்ந்து சரோஜை தேடி உள்ளார்.

ஆனால் காவல்துறை விசாரணையில் அருணின் தகவல்கள், செயல்பாடுகள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததை அடுத்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர் அதன் அடிப்படையில் அருணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் தனது உறவினரை கொலை செய்ததை அருண் ஒத்துக்கொண்டார். இதையடுத்து அருணை கைது செய்து போலீசார் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com