\
ஜெய்ஸ்ரீராம், அல்லா என சொல்லுமாறு மிரட்டி மனநலம் பாதித்த பெண் மீது தாக்குதல்

ஜெய்ஸ்ரீராம், அல்லா என சொல்லுமாறு மிரட்டி மனநலம் பாதித்த பெண் மீது தாக்குதல்

ஜெய்ஸ்ரீராம், அல்லா என சொல்லுமாறு மிரட்டி மனநலம் பாதித்த பெண் மீது தாக்குதல்
Published on

ராஜஸ்தான் மாநிலத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை அல்லா என்றும் ஜெய் ஹனுமான், ஜெய் ஸ்ரீராம் எனவும் சொல்லுமாறு கட்டாயப்படுத்தி இளைஞர்கள் சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், பட்டப்பகலில் பெண் ஒருவரை இரண்டு இளைஞர்கள் சரமாரியாக தாக்குகின்றனர். சாலையோரம் ஒன்றில் நடைபெறும் இந்த சம்பவத்தில் அல்லா என்றும் ஜெய் ஹனுமான், ஜெய் ஸ்ரீராம் எனவும் கூறுமாறு இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக் பைப் கொண்டு நின்று கொண்டிருக்கும் அந்த பெண்ணை சரமாரியாக அடிக்கிறார். இதனால் அந்தப் பெண் வலி தாங்க முடியாமல் கீழே விழுகிறார். தொடர்ந்து அருகில் இருக்கும் மற்றொரு நபரும் பிளாஸ்டிக் பைப்பை வாங்கி அப்பெண்ணின் முதுகு, கை, கால் என பாராமல் தொடர்ச்சியாக அடிக்கிறார். அந்தப்பெண்ணோ தயவுசெய்து அடிக்காதீர்கள் என கதறுகிறார். ஆனால் விடாப்பிடியாக, அல்லா என்றும் ஜெய் ஹனுமான், ஜெய் ஸ்ரீராம் என்று கூறுமாறு தொடர்ந்து மிரட்டுகின்றனர். மேலும், அப்பெண்ணை காலாலும் இளைஞர் உதைக்கிறார். இதனை அருகில் இருசக்கர வாகனத்தில் இருக்கும் ஒருவர் வேடிக்கை பார்க்கிறார். யாரும் இந்த தாக்குதலை தடுக்க முன்வரவில்லை.
பின்னர் அந்த பெண்ணை மீட்ட காவல்துறையினர் தாக்குதல் நடத்திய இரண்டு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com