ம.பி: கால்களுக்கு பதிலாக கொம்பு உருவத்துடன் பிறந்த குழந்தை! குழப்பத்தில் மருத்துவர்கள்!

ம.பி: கால்களுக்கு பதிலாக கொம்பு உருவத்துடன் பிறந்த குழந்தை! குழப்பத்தில் மருத்துவர்கள்!
ம.பி: கால்களுக்கு பதிலாக கொம்பு உருவத்துடன் பிறந்த குழந்தை! குழப்பத்தில் மருத்துவர்கள்!

மத்தியப் பிரதேசத்தில் கால்களுக்கு பதிலாக கொம்பு போன்ற அமைப்புடன் பிறந்த குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்பூர் மாவட்டத்தில் மணிப்புரா ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஒரு அதிசயக்குழந்தை பிறந்தது. இரு கால்கள் இல்லாமல் பிறந்த அந்த குழந்தை பெற்றோரை குழப்பத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் மருத்துவர்களையும் குழப்பியது. கால்களுக்கு பதிலாக கொம்பு போன்ற அமைப்பு நீண்டு இருப்பதே இந்த குழப்பத்திற்கு காரணம் ஆகும்.

குழந்தை போதிய வளர்ச்சியடையாமல் 1 கிலோ 400 கிராம் மட்டுமே எடை கொண்டதாக தெரிவித்த மருத்துவர்கள், குழந்தை உடல்நிலையை கருத்தில் கொண்டு ஷிவ்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு குழந்தையை மாற்றியுள்ளனர். விசித்திரமான குறைபாட்டுடன் பிறந்த அக்குழந்தை சிறப்பு பராமரிப்பு பிரிவில் நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கால்களுக்குப் பதிலாக கொம்பு போன்ற அமைப்புடன் பிறந்த அதிசயக் குழந்தை குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தற்போது இதுபோன்ற குறைபாடுக்கான காரணத்தை மருத்துவர்கள் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தை ஏதேனும் மோசமான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் தெரியவில்லை.

சில சமயங்களில் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தை தாயின் வயிற்றில் இருந்து பெறத் தவறினால், அவை குறைபாட்டுடன் பிறக்கின்றன என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற அரிதான சந்தர்ப்பங்களில், குழந்தை சிறு வயதிலேயே இறந்துவிடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com