ம.பி. - பதவி காலத்தின் இறுதி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யும் சிவராஜ் சவுகான்!

ம.பி. - பதவி காலத்தின் இறுதி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யும் சிவராஜ் சவுகான்!
ம.பி. - பதவி காலத்தின் இறுதி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யும் சிவராஜ் சவுகான்!

மத்திய பிரதேசத்தில் , சிவராஜ் சவுகான் அரசு தனது நான்காவது பதவிக்காலத்தின் இறுதி பட்ஜெட்டை (நிதி ஆண்டு 2023-24) இன்று சட்டசபையில் தாக்கல் செய்கிறது

மத்தியப் பிரதேச நிதியமைச்சர் ஜகதீஷ் தேவ்தா இந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.பட்ஜெட்டில், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை கிடைக்கப்பெறும் திட்டமான லட்லி பஹ்னா, பிரதான் மந்திரி அவாஸ் நகர்ப்புற மற்றும் கிராமப்புறம், நல்ஜல் யோஜனா உள்ளிட்டகிய திட்டங்களுக்கு மாநில அரசு பட்ஜெட்டை ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை பட்ஜெட் சுமார் ரூ.3.20 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியப் பிரதேச சட்டப் பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட் (இ-பட்ஜெட்) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.2022-23 நிதியாண்டில், அம்மாநில பட்ஜெட் 2.79 லட்சம் கோடி பட்ஜெட்டாக தாக்கல்செய்யப்பட்டது


பட்ஜெட் குறித்து அம்மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் கூறுகையில் , பாராளுமன்றத்தின் பட்ஜெட் 2023-24க்கு முன்னதாக வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையின்படி மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் ஜிஎஸ்டிபி 7.06 சதவீதம் அதிகரித்துள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் காரணமாக மாநிலம் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.மாநிலத்தின் நிதி நிர்வாகம் சிறப்பாக உள்ளது, தனிநபர் வருமானமும் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com