இந்தியா
கேரளா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டில் இணையும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்
கேரளா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டில் இணையும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்
கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ரதி குமார் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளார். முன்னதாக சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.பி.அனில்குமார், பி எஸ் பிரஷாந்த் ஆகியோரும் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்திருந்தனர்.
காங்கிரஸிலிருந்து மூத்த தலைவர்கள் விலகுவது அக்கட்சி சீர்குலைந்து வருவதை காட்டுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற கேரள சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி தொடர்ந்து 2வது முறையாக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இது காங்கிரஸிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

