இந்தியா
பேஸ்ட் என நினைத்து எலி மருந்தில் பல் தேய்த்த பெண் பரிதாப பலி
பேஸ்ட் என நினைத்து எலி மருந்தில் பல் தேய்த்த பெண் பரிதாப பலி
கர்நாடகாவில் டூத் பேஸ்டுக்கு பதில் அறியாமல் எலி மருந்தை பயன்படுத்திய பெண் உயிர் இழந்துவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் மால்பே பகுதியைச் சேர்ந்தவர் லீலா கார்கிரா (57). இவர் நவம்பர் 19ஆம் தேதி காலை 5 மணியளவில் வழக்கம் போல் பல் துலக்கப்போனார். அப்போது டூத்பேஸ்டுக்கு பதிலாக தெரியாமல் எலி மருந்தை எடுத்து பல் துலக்கிவிட்டார். இதையடுத்து உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நவம்பர் 24ஆம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக மால்பே காவல் துறையினர் விசாரணை நடத்தி, இயற்கைக்கு மாறான மரணம் என்று பதிவு செய்தனர். இந்த சம்பவம் மால்பே பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.