ஜம்மு காஷ்மீரின் பொதுவிடுமுறை பட்டியல்: தியாகிகள் தினம் நீக்கம்

ஜம்மு காஷ்மீரின் பொதுவிடுமுறை பட்டியல்: தியாகிகள் தினம் நீக்கம்
ஜம்மு காஷ்மீரின் பொதுவிடுமுறை பட்டியல்: தியாகிகள் தினம் நீக்கம்

2020-ஆம் ஆண்டுக்கான ஜம்மு காஷ்மீரின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியலிலிருந்து முன்னாள் முதலமைச்சர் ஷேக் அப்துல்லாவின் பிறந்தநாள் தினம் மற்றும் தியாகிகள் தினம் நீக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பட்டியலை ஜம்மு காஷ்மீர் பொது நிர்வாகத்துறையின் துணைச் செயலாளர் ஜி.எல்.சர்மா வெளியிட்டுள்ளார். அதில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், வருகிற ஆண்டு 27 பொதுவிடுமுறை நாட்கள் பின்பற்றப்படும் என்று அவர் அறிவித்திருக்கிறார். அதன்படி, முன்னாள் முதலமைச்சர் ஷேக் அப்துல்லாவின் பிறந்த நாளான டிசம்பர் 5-ஆம் தேதியன்று வழங்கப்பட்டு வந்த பொது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தியாகிகள் தினத்தையொட்டி ஜூலை 13-ஆம் தேதியன்று வழங்கப்பட்டு வந்த விடுமுறையும் நீக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், இந்தியாவுடன் இணைந்த நாளான அக்டோபர் 26-ஆம் தேதி தொடர்ந்து விடுமுறை தினமாக பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com