\
இந்தியாவில் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 

இந்தியாவில் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 

இந்தியாவில் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 
Published on

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,393 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை குறைந்து வந்த நிலையில் சில நாட்களாக கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 43,393 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மொத்த பாதிப்பு 3 கோடியே 7 லட்சத்து 52 ஆயிரத்து 950 ஆக அதிகரித்துள்ளது.

அதே வேளையில் 44,459 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 2 கோடியே 98 லட்சத்து 88 ஆயிரத்து 284 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியா முழுவதும் தற்போது 4 லட்சத்து 58 ஆயிரத்து 727 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒரே நாளில் மட்டும் 911 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். எனவே மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 5 ஆயிரத்து 939ஆக உயர்ந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com