'ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள்' - பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தகவல்

'ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள்' - பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தகவல்
'ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள்' - பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தகவல்

ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் 5 நதி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து, அவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.

இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும் என்றும் எண்ணெய் வித்துகள், சிறு தானியங்கள் உறபத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் கோதாவரி- பெண்ணாறு- காவிரி உள்ளிட்ட 5 நதி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் தெரிவித்துள்ளார். 2023க்குள் 2,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com