\
துப்பாக்கி உரிமம் பெற பசுக்களுக்கு போர்வை வழங்கிய மக்கள்..!

துப்பாக்கி உரிமம் பெற பசுக்களுக்கு போர்வை வழங்கிய மக்கள்..!

துப்பாக்கி உரிமம் பெற பசுக்களுக்கு போர்வை வழங்கிய மக்கள்..!
Published on: 

மத்திய பிரதேசத்தில் துப்பாக்கி உரிமம் பெறுவதற்காக 170 பேர் கடந்த‌ ஒரு வாரத்தில் மட்டும் ஆயிரத்து 700 போர்வைகளை பசுக்களுக்காக வழங்கியுள்ளனர்.

குவாலியரில்‌ ஆதரவற்ற பசுக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக, துப்பாக்கி உரி‌மத்திற்காக பதிவு செய்வோர் 10 பசுக்களுக்கு போர்வை அளிக்க வேண்டும் அல்லது 3 நாட்கள் பசு தொழுவத்தில் சேவை செய்ய வேண்டும் என அம்மாவட்ட நிர்வாகம் நிபந்தனை விதித்து இருந்தது.

இந்நிலையில், ‌கடந்த வாரத்தில் மட்டும் ‌170 பேர் ஆயிரத்து 700 போர்வைகளை வழங்கியுள்ளதாகவும், அவை பசுக்களுக்கும், வீடற்றவர்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் குவாலியர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com