இந்தியா
மகர சங்கராந்தி விழா: பட்டியலினத்தவர் வீட்டில் உணவருந்திய யோகி ஆதித்யநாத்
மகர சங்கராந்தி விழா: பட்டியலினத்தவர் வீட்டில் உணவருந்திய யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பட்டியலினத்தவர் வீட்டில் உணவு சாப்பிட்டார்.
தமிழகத்தின் பொங்கல் பண்டிகையைப் போன்று இந்தியாவின் பிற பகுதிகளில் மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் பகுதியில் நடைபெற்ற மகர சங்கராந்தி விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அங்குள்ள பட்டியலின வகுப்பைச் சார்ந்த ஒருவரின் வீட்டில் உணவருந்தியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய யோகி ஆதித்யநாத், பட்டியலினத்தைச் சார்ந்த அமிர்தலால் பாரதி என்பவரின் அழைப்பின் பேரில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகவும், அதற்காக நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.