டெல்லியில் மணிப்பூர் பெண் மீது இனவெறி தாக்குதல்?: ‘கொரோனா’ என அழைத்து அவமதித்ததாக புகார்

டெல்லியில் மணிப்பூர் பெண் மீது இனவெறி தாக்குதல்?: ‘கொரோனா’ என அழைத்து அவமதித்ததாக புகார்

டெல்லியில் மணிப்பூர் பெண் மீது இனவெறி தாக்குதல்?: ‘கொரோனா’ என அழைத்து அவமதித்ததாக புகார்
Published on

வடமேற்கு டெல்லியில், மணிப்பூர் இளம் பெண் ஒருவர் கொரோனா என அழைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

உலகமே கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைகுலைந்து நிற்கிறது. சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று இன்று இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி இருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனையடுத்து அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப். கொரோனா சம்பந்தப்பட்ட தகவல்களை சீனா மறைத்துவிட்டதாக கூறி விமர்சனம் செய்திருந்தார். 


இந்தியாவை பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 471 லிருந்து 492 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறன. இந்நிலையில் டெல்லியில் சீனர்கள் என தவறாக கருதி, வட மாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் வடமேற்கு டெல்லியில் உள்ள விஜய்நகர் பகுதியில், மணிப்பூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு 10 மணிக்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிக்கு சென்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது காரி உமிழ்ந்துள்ளனர். இது மட்டுமல்லாமல் அவரை “ கொரோனா” என்று அழைத்து அவமதித்துள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி காவல் அதிகாரி விஜயந்த ஆர்யா கூறும்போது பெண்களை அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com