\
பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி எரித்துக் கொலை

பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி எரித்துக் கொலை

பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி எரித்துக் கொலை
Published on

ஜார்கண்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் சாத்ரா மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி நேற்று முன்தினம் தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு நான்கு பேர் கொண்ட கும்பல் அந்தச் சிறுமியை கடந்தியுள்ளார். மதுபோதையில் இருந்த அவர்கள், அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார் சிறுமி. இதனையடுத்து இந்த விவகாரம் பஞ்சாயத்தின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பஞ்சாயத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் அபராதமும், 100 தோப்புக்கரணமும் தண்டனையாக வழங்கியுள்ளார்.

ஆத்திரமடைந்த அந்த நபர்கள் சிறுமியின் இல்லத்திற்கு சென்று அவரது பெற்றோர்களை தாக்கியுள்ளனர். பின்னர் அவர்களின் கண்முன்பே அந்த சிறுமியை தீ வைத்து எரித்துள்ளனர்.இவ்விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com